Home Sitemap Contact Us

  நன்னன்குடி




அறக்கட்டளை


 
          தம் குடும்பத்தில் இப்போது (2010) பன்னிரு (12) உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை உறுப்பினராகக் கொண்டு "நன்னன் குடி" எனும் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவப் பட்டுள்ளது. அது ஆண்டுதோறும் பின்வரும் அறச் செயல்களைச் செய்கிறது.


          அ. தம் பெற்றோர் மாணிக்கம் மீனாட்சி ஆகியோர் நினைவாகத் திருமுட்டதிலுள்ள த. வீ. செ. மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர் மூவர்க்கு முறையே 5 + 3 + 2 = 10 (பத்தாயிரம்) உருவாக்கள் ஆண்டுதோறும் பரிசளிக்கப்படுகிறது.
 
 
 
 
 
           ஆ. தம் மாமனார் மாமியாராகிய ஆறுமுகம் சானகி ஆகியோர் நினைவாகச் சாத்துக்குடலில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதல் மதிப் பெண்கள் பெரும் மூவர்க்கு முறையே 5 + 3 + 2 = 10 (பத்தாயிரம்) உருவாக்கள் ஆண்டுதோறும் பரிசளிக்கப்படுகிறது.
 
 
 
 
 
           இ. மறைந்த தம் மகன் ந.அண்ணலின் நினைவாகப் புதினம், சிறுகதை, பா ஆகிய போட்டிகள் நடத்தி அவற்றுள் சிறந்த படைப்புகளுக்கு மொத்தம் 50 , 30 , 20 ஆயிரம் உருவாக்கள் அளிக்கப்படுகின்றன.
 
 
 
 
 
           ஈ. சிறுகுடி விருந்து என்பதோர் விருந்தும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
 
 
 
 
 
           உ. கி.பி. 2008 முதல் தமிழைத் தமிழாக்குவோம் என்னும் பொருள் பற்றித் தேர்வு நடத்தி அதில் முதல் அய்ந்து மதிப்பெண் பெறுவோருக்கு முறையே ( 4 , 3 , 2 , 1/2 , 1/2 = 10 ) பத்தாயிரம் உருவாக்கள் வழங்க திட்டமிடப்பட்டு,  பள்ளிகளில் அது நடைமுறைக்கு வந்துள்ளது. தொடக்க ஆண்டாகிய 2008 ஆம் ஆண்டில் சென்னைக் கெல்லட், சேத்தியாத்தோப்பு, திருமுட்டம், பெண்ணாடம் ஆகிய ஊர்களில் உள்ள நான்கு மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வுப் போட்டி நடத்திப் பரிசளிக்கப்பட்டது.
 
 
 
 
 
           ஊ. கி.பி.2009 இல் இப் பள்ளிகளின் எண்ணிக்கை பத்தாகக் கூடியது. கி.பி 2010 முதல் பள்ளிகளின் எண்ணிக்கை மேலும் கூடக் கூடும். மேலும் இவ்வாண்டில் பரிசு பெரும் மாணவர்க்குத் தமிழைத் தமிழாக்குவோம் மேல்நிலைத் தேர்வு நடத்தி (10 + 6 + 4 = 20) இருபதாயிரம் உருவாக்கள் பரிசளிக்கும் திட்டமும் தொடங்கி அது தொடர்ந்து நடைபெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.