Home Sitemap Contact Us

  இவரைப்பற்றி


பெரியாரின் பெரு நெறி பிடித் தொழுகுவதால் அகம்,புறம் ஆகிய இரு நெறிகளிலும், பொருள் நிலை, உணர்வுநிலை ஆகியவற்றிலும் நல்வாழ்வு வாழ்ந்த மா.நன்னன் வாழ்க்கைக் குறிப்புகள்


 
தோற்றம் : 30.07.1923
மறைவு : 07.11.2017
பாட்டனார் : சபாபதி
பெற்றோர் : மாணிக்கம், மீனாட்சி
ஊர் : காவனூர் , விருத்தாசலம் வட்டம் , கடலூர் மாவட்டம்
உடன் பிறந்தோர் : அண்ணன்மார் - மூவர், தம்பி - ஒருத்தன், தங்கை - ஒருத்தி
வாழ்கைத் துணைவர் : பார்வதி
பெற்றோர் : ஆறுமுகம், சானகி
ஊர் : விருத்தாசலத்தையடுத்துள்ள சாத்துக்குடல்
அகவை : எம்மினும் ஏழு (7) ஆண்டுகள் குறைவு
மக்கள் : வேண்மாள் (5.9.55), அண்ணல் (30.07.58), அவ்வை (20.6.60)


 
 மூத்த மகள் வேண்மாள், பஞ்சாப் நேசனல் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
 
 
 
 
 
 இரண்டாம் மகள் அவ்வை, இந்தியன் வங்கியில் பணி செய்கிறார்.
 
 
 
 
 
 மகன் அண்ணல், மருத்துவத் துறையில் உயிரி இயல் பிரிவில் நோபல் பரிசு   வாங்குவார் என அத்துறையின் அறிஞர் பலராலும் எதிர்பார்த்துப் பாராட்டப் பட்டவராய்   ஓங்கித் தனது முப்பத்தாறாம் அகவையில் மாண்டு விட்டார்.
 
 
 
 
 
 ஒரு பெயரனும் இரு பெயர்த்திகளும் இரு கொள்ளுப் பெயரர்களும் உளர்.
 
 
 
 
 
 மூத்த மருமகன் செம்மல் யூனியன் வங்கியில் மூத்த மேலாளராகப் பணி   புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
 
 
 
 
 
 இளைய மருமகன் தமிழ்ச்செல்வன், தனித்துறையை ஏற்படுத்திக் கொண்டு பல்வகைத்    தொழில்களிலும் சிறக்கிறார். 
 
 
 
 
 
 பெயரன் அறிவன், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டு தன்   காலத்தின்  பெரும்பகுதியை வானூர்திப் பயணத்திலேயே கழிக்கிறார். 
 
 
 
 
 
 தம் பெயரனின் மனைவி துர்க்கா.
 
 
 
 
 
 கொள்ளுப் பெயரன் கவின் வளர்கிறார். பெயர்த்தி அணிமலர் தன் துணைவருடன்   (திரு.வினோத்) கலிபோர்னியாவில் வாழ்கிறார். கொள்ளு பெயரன் வினையன்   பிறந்துள்ளார். மற்றொரு பெயர்த்தி மலர் கனடாவில் வாழ்கிறார்.